முதல்ல விண்ணைத் தாண்டி வருவாயா ட்ரெயிலரை பார்த்துடுங்க. அதுல வர கார்த்திக், ஜெஸ்ஸி ரெண்டு பேர வெச்சுதான் இந்தக் கதை எழுதியிருக்கேன். கௌதம் மேனன் மற்றும் அவர் டீம்க்கு ஒரு பெரிய மன்னிப்பு கேட்டுக்கறேன் மற்றும் நன்றிகள் சொல்லிக்கறேன்.
--
காதல தேடிட்டு போகமுடியாது. அது நெலைக்காது. அதுவா நடக்கணும். நம்மள போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டு திருப்பணும். அதான் ட்ரூ லவ். அது எனக்கு நடந்தது. என்ன அடிச்சது அந்தக் காதல்
எத்தனையோ பொண்ணுங்க இருந்தாங்க உலகத்துல. நான் ஏன் ஜெஸ்ஸிய ச்சூஸ் பண்ணேன்?
நான் ஜெஸ்ஸிய முதல்ல பாத்தது ஆறு மாசத்துக்கு முன்னால. அப்போதான் MCA முடிச்சிட்டு வேலைல ஜாய்ன் பண்ணியிருந்தேன். ரொம்ப சந்தோஷமான நாட்கள் அதெல்லாம். நாம சந்தோஷமா இருக்கும்போது மேலும் மேலும் சந்தோஷங்கள் வரும்ல, அப்படிதான் ஒருநாள் ஜெஸ்ஸி வந்தா..
--
ஆறு மாதங்களுக்கு முன்..
நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் நிறையத் தொடங்கியிருந்த மாலை நேரம். நான் அந்த நீண்ட க்யூவின் கடைசியில் நின்றிருந்தேன். சலிப்பாக இருந்தது. முன்னால் நின்றிருந்த தலைகளை எண்ண ஆரம்பித்தேன். 16 பேர். ஷிட்!
15 பேர். 14 பேர். 13 பேர். 12. 11. 10. ...4.
"எக்ஸ்யூஸ் மீ?"
குரல் கேட்டு திரும்பினேன். அவள் நின்றிருந்தாள்.
"கொஞ்சம் அவசரம். பார்க் ஸ்டேஷன்க்கு ஒரு டிக்கெட் எடுத்து தரமுடியுமா?" நான்கு ரூபாய் நீட்டினாள்.
நான் அவளைப் பார்த்தேன். அழகாக இருந்தாள். ரொம்ப அழகாக இருந்தாள். நம்பவே முடியாத அளவு அழகாக இருந்தாள். தான் எவ்வளவு அழகென்று அவளுக்கு தெரிந்திருந்தது.
நிறைய படித்திருப்பாள். அந்த கான்பிடன்ஸ் அவள் முகத்தில் இருந்தது. உதவி கேட்கிறோமே என்று வரவழைக்கப்பட்ட போலியான பணிவு அவள் கண்களில் இருந்தது. ஆனால் அது தற்காலிகமானது.
நான் பின்னால் திரும்பி க்யூவைப் பார்த்தேன். எனக்கு பின்னால் 3 பேர் மட்டும் நின்றிருந்தார்கள். அவளிடம் புன்னகைத்தேன்.
"நம்ம ஊர்ல பொண்ணுங்க, கொஞ்சம் அழகா இருந்தா க்யூலலாம் நிக்க வேண்டியதே இல்லைல?"
சத்தியமாக இந்த பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் கண்களில் சட்டென்று ஒரு கோபம் தெரிந்தது.
"போய் க்யூல நில்லுங்க."
அவள் எதுவும் சொல்வதற்குள் எனக்கு முன்னாடி நின்றிருந்த மாமா, "இங்க குடும்மா. எங்க? பார்க் ஸ்டேஷனா?" என்றார்.
"தேங்க்ஸ் அங்கிள்," என்றபடி என் வாழ்க்கையிலிருந்து விலகிப்போனாள்.
--
அடுத்த வாரம் ஸ்ரீரங்கம் போயிருந்தேன். வேலை கிடைத்தற்கு பெருமாளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது அம்மா விருப்பம். கோவிலுக்கு போய்விட்டு சென்னை திரும்ப திருச்சி பேருந்து நிலையத்தில் அல்லாடிக் கொண்டிருந்தேன்.
"சீட் இல்லப்பா.."
"ட்ரைவர் சீட்டுக்கு பின்னாலதான் உட்காரணும்.."
"ரிசர்வேஷன் இல்லையா?"
"படிக்கத் தெரியாதா? இது மதுரை பஸ்ஸுப்பா.."
ராத்திரி அர்த்த ராத்திரி ஆகிக் கொண்டிருந்ததில் சற்று கலவரமானேன். ஒரே ஒரு கண்டக்டர் மட்டும், "ஒரு சீட் இருக்கு சார். ஆனா லேடீஸ் பக்கத்துல.. நீங்க ஏற முடியாது."
"சார் வேற சீட் இருக்கானு பார்க்கலாமா?"
"தாராளமா பாருங்க."
சீட் எதுவும் இல்லை என்றால் அந்த "லேடி" யாராக இருந்தாலும், காலில் சாஷ்டாங்கமாக விழுந்துவிடுவது என்ற முடிவோடு பஸ்ஸில் ஏறினேன். நினைத்தது போலவே சீட் எதுவும் இல்லை. முன்னால் வந்து அந்த "லேடி" யாரென்று பார்த்தேன்.
அவள்.
என்னிடம் டிக்கெட் கேட்டவள். நான் போய் க்யூவில் நிற்க சொன்ன அவள். ஐபாட் காதில் சொருகியிருக்க கண்கள் மூடியிருந்தாள். ஒருவாரம் முன்னால் சென்னையில் நடந்தது இன்னும் ஞாபகம் இருக்குமா என்ன?
அவளைப் புதிதாக பார்ப்பதுபோல நினைத்துக் கொண்டேன்.
"Excuse me?" கண்கள் திறந்தாள். "If you don't mind, can i take this seat?"
என்னைப் பார்த்தாள். நிறுத்தி நிதானமாக. அப்புறம் சொன்னாள். "I do mind!"
"நம்ம ஊர்ல பசங்க, கொஞ்சம் இங்கிலீஷ் பேசினா பொண்ணுங்க சரின்னுடுவாங்கள்ல?"
நான் சொன்ன அதே தொனியில் சொன்னாள். இன்னுமா ஞாபகத்தில் இருக்கிறது? ஹ்ம்ம்..
"Look I apologize for the other day, now i'm in..."
"உட்காருங்க," என்றாள்.
(ஆட்டோ எதுவும் வராவிட்டால்.. தொடரும்)
Part -2


45 comments:
கதை(?!) சூப்பர். தொடர்க. :))
@ஸ்ரீமதி
நன்றிகள் பல. LOL. :))
//கதை(?!)
இங்கயுமா? உங்களலாம்..
அசத்தலா இருக்கு தல....
ஓட்டோ எல்லாம் வராது.... கலக்குங்க....
நல்லா இருக்கு....
நீங்களும் தொடர் எழுத ஆரம்பிச்சாச்சா?
நல்லா இருக்கு. :)
அடேய்... பெர்ஃபெக்ட் ஸ்டார்..
படிக்கும்போது ஏனோ காதுகளில் அரோமலே எதிரொலித்தது....
விடாம தொடர்ந்து எழுது. ஏன் சொல்றன்னா முதல் பின்னூட்டம் போட்டவங்க ராசி அப்படி :))
கலக்கலா இருக்கு தல, தொடருங்க
ஆஹா, சூப்பர் தல, கதை கலக்கல்,
ஆட்டோ வராவிட்டால்???
எப்ப அடுத்த பகுதி...??..;)
@கனககோபி : நன்றி. நன்றி. :)
@சின்ன அம்மினி : ஆமாங்க. நன்றி. :)
@கார்க்கி ரொம்ப நன்றி கார்க்கி. :) ஹிஹி ;)
@சுபாங்கன் நன்றி தல. :)
@பவன் நன்றி. சீக்கிரம். :)
wow thatfantastic! U really know the intricasis of being in love, dont u :P very well writtern . Nice idea on the characterisation from the movie, now we have mental image of how they would look , act and all. :)
interesting :)..keep going
you eppadiya ithelaam???
youthu ????? nadathu nadathu.... kalakara karthi...
//(ஆட்டோ எதுவும் வராவிட்டால்.. தொடரும்)//
அப்ப லாரி அனுப்பினா :)
ஸ்ரீரங்கம் உங்களுக்கு பிடிச்ச கோயில்தானே கார்த்திக் :) ம் நடக்கட்டும் .
சீக்கிரம் அடுத்த பார்ட் போடணும். இல்லாட்டி கண்டிப்பா லாரியே வரும்
@sri //U really know the intricasis of being in love, dont u//
namma karthik thambi, athula PHD vaangi vachu irukaaru!!
and karthik, well-written man!!! after a very long time, had a gr8 feeling reading a nice story!:) keep going. the flow was so gd that i was able to picturise every scene in my mind.
@Srivats : ரொம்ப நன்றி. பட் ஏன் திடீர்னு கொலவெறி? :)
@கமல் : ரொம்ப நாளுக்கப்புறம்.. நன்றி. :)
@தன்ஸ் : நன்றி தல. :)
@தாரணி அக்கா : ஆவ்வ் விடுங்க. நன்றி. :)
@தமிழ் : நீங்களுமா? ஆவ்வ். தேங்க்ஸ் சிஸ். :)
interesting :) Continue பண்ணுங்க
நல்ல கதை
கலக்கல் கார்த்திக் !!
என்ன .....காதல் கதையா ...கார்த்திக் அதுல மன்னர் ல .......
கதை அருமை .......
இதற்க்கு தான் நான் ஆங்கில இலக்கியம் ஜாஸ்தியா படிக்கறது இல்லை
தொடருங்க கார்த்திக் ....... ஆட்டோ எதாச்சு வந்தால் எனக்கு CALL DIVERT பண்ணி விட்டுருங்க
என்னமோ தெரியல கார்த்திக் .....எனக்கு பழைய ஞாபகம் எல்லாம் வருது
@ராஜலக்ஷ்மி, க.ராமசாமி, கதிரவன், மேவி
நன்றிகள். :))
Wow.Simply Wow.Cant wait for the movie to be released. Cant wait for your second part either.Make it a happy ending, please please please! :):):)
@monicz
wow thanks.. yeah, me too can't wait the movie to release.. will post the next part as soon as i wrote..:)
ஃபிகரைப் பார்த்தால் பீட்டர் தான் விடுவீயளோ ராசா :)
@Vijay
No bro. See!! :)
When are you moving back to chennai?
"Karthik said...
@ராஜலக்ஷ்மி, க.ராமசாமி, கதிரவன், மேவி
நன்றிகள். :))"
???!!!!
அந்த படத்தை உபயோகித்து ஏதோ உண்மை சொல்றது மாதிரி இருக்கு
நடத்துங்க ...
இந்த ட்ரெய்ரலை வச்சு கதைக்களம் உருவானவிதம்... சான்சே இல்ல..
வாழ்துக்கள் கார்த்தி.
அடுத்த தொடர் எப்பொழுது?
@மேவி : என்னாச்சு???
@ஜமால் : ஆஹா. ;) நன்றி. :)
@தர்ஷினி : வாவ் நன்றி. :) Very soon. :)
அட! எவ்வ்ளோ தாங்கிருக்கோம்...இதைத் தாங்க மாட்டோமா கார்த்திக்!....இதுக்கெல்லாமா ஆட்டோ அனுப்புவாங்க!???
நான் நினைக்கிறேன், நம்ம கொளதம் படம் வரும்போதெல்லாம் உங்களுக்கு கற்பனை வளம் பிச்சுகிதுனு, எப்ப பார்த்தாலும் அவங்கட்ட மன்னிப்பு கேட்டுட்டு உங்க ஆட்டத்தை ஆரம்பிக்கிறீங்க.
அதே flowல எழுதி முடிக்க வாழ்த்துக்கள்
:)
அடுத்த பகுதி விரைவில் போடாவிட்டால் சகல வாகனங்களும் நுங்கம்பாக்கம் ஸ்டேஷனுக்கு அனுப்பிவைக்கப்படும் ;)
@அன்புடன் அருணா : இதெல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் தாங்கிக்கிறதுதானேன்னு சொல்றீங்க.. அது சரி. :)
@ஆனந்த : ஆமாம்ல? :) நன்றி தல.
@அமித்து அம்மா : நன்றி. நாளை அல்லது மறுநாள். :)
நல்ல ஆரம்பம்... தொடரவும்ம்...
ஸாரி... இப்படிப் பின்னூட்டினா இங்க நல்லா இருக்காது...
dude... good try..பிடிச்சிருக்கு..நான் தான் கொஞ்சம் late.
(trailer பார்த்துட்டு படிக்க வந்ததால கொஞ்சம் லேட்)
அட பிப்ரவரிய காதல் மாதமா கொண்டாட நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள் கார்த்திக்
@thamizparavai : tamilil type panra vasathi ingillai. athan. :) nanri. :)
@prem : kadhal kalam neenga than arambikkanum. :)
/ஆட்டோ எதுவும் வராவிட்டால்.. தொடரும்/
ஏன் தொடரவில்லை?எத்தனை ஆட்டோ வந்துச்சி?
போரடிச்சாலும் தொடர மாட்டேன். சுத்த போரா இருக்கு. :)
நல்லா இருக்கு
thanks anbu.. ;)
next part?
@ராஜலக்ஷ்மி
அடுத்த பகுதி எழுதிருக்கேன். பாருங்க. நன்றி. :)
மோதல்ல தான் எல்லா காதலும் ஆரம்பிக்கனுமா என்ன?
@திவ்யபிரியா
அக்கா உங்களதான் தேடிட்டு இருக்கேன். ஒரு எக்ஸ்பர்ட் ஒப்பினியனுக்காக. சொன்னீங்கன்னா சந்தோஷம். :)
thalaiva vaanga vaanga... sema sweet aarambam... munnadiye padikaathathu en thavaru... :( :(
mannipeergalaga...
தல வாங்க படிங்க. :)
மன்னிப்பு தமிழ்ல... ;)
Post a Comment