கொஞ்சம் மொக்கை


முதலில் வானவில் வீதியின் ஏழரைக்கோடி வாசகர்களுக்கு நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்ற நற்செய்தியை கூறிவிடுகிறேன்.

பேய்த்தனமாகிவிட்டிருக்கிறது வாழ்க்கை. மூச்சு விடக்கூட நேரமில்லாத வாழ்க்கையை வேறு என்ன சொல்வது? காலையில் அழுக்கு ஜீன்ஸை மாட்டிக் கொண்டு ஓடுவதிலிருந்து, அர்த்த ஜாமத்தில் திரும்பி வந்து படுக்கையில் சரிவது வரை, பேயலைச்சல். இத்தனைக்கும் கல்லூரியில் வகுப்பு வெறும் 5 மணி நேரங்கள்தான். ஹ்ம்ம்..

'வானவில் வீதி' பக்கமே வரமுடியவில்லை. 'விண்ணைத்தாண்டி வருவாயா' மூன்றாவது பாகம் எழுத வேண்டியிருக்கிறது. இரண்டாவது பாகத்தை படித்து காண்டான மக்கள்ஸ், தற்சமயம் நிம்மதியாக இருப்பதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. கூடிய விரைவில் அந்த நிம்மதியை கெடுக்க உத்தேசித்திருக்கிறேன். சின்ன அம்மிணி வேறு 'டீன் ஏஜ்' தொடர் பதிவுக்கு அழைத்து ஒரு வரலாற்றுப்பிழை இழைத்திருக்கிறார்கள். அந்த பதிவையும் எழுதும் எண்ணமிருக்கிறது என்று சொல்லிவிடுகிறேன்.

நண்பர்கள் எல்லோருடைய பதிவையும் வகுப்பில் உட்கார்ந்து மொபைலில் படித்துவிட்டாலும், பதிவுக்கு சென்று என் மேலான கருத்தை பதிவு செய்ய முடியவில்லை. மன்னிக்கவும். 

சொந்தக்கதை பேசி போரடித்தது போதும். கொஞ்சம் ஆன்மீகம் (?) பேசுவோம்.

நித்தியானந்தாவின் வீடியோ எல்லா பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளையும் உடைத்துவிட்டிருப்பதாக அறிகிறேன். (இதற்கு முந்தைய ரெக்கார்டு காஞ்சிபுரம் தேவநாதனுடையது) தமிழர்களின் ரசனை பற்றிய சந்தேகம் எனக்கு எப்போதுமிருந்ததில்லை. கலைத்தாகம் கொண்ட கலாச்சாரம் நம்முடையது.

ட்விட்டரில் வேறு நம் மக்கள்ஸ் இதை ட்ரண்டிங் டாபிக் ஆக்கி ஜல்ஸா பண்ணிக் கொண்டிருந்தார்கள். அரிய முத்துக்கள் படிக்கக் கிடைத்தன. (#Nithyananda : Baba by day. Blacksheep by night; Discourse by day. Intercourse by night.) நம் மக்கள் இப்படி ஜாலி பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்த வெள்ளைக்கார ட்விட்டர்கள், நித்தியானந்தா யாரென தெரியாமல் பாயைப் பிராண்டியது தனிக் கதை. மொத்தத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதுதான் முக்கியம்.

இதற்கிடையில் சில சீரியஸ் பதிவர்கள் வழக்கம்போல இதென்ன கழிசடைகளை ஒளிபரப்புவது, journalistic ethics, privacy invasion, exploitation of actresses, godmen in society என்று இங்கிலீஷ் வார்த்தைகளில் வருத்தப்பட்டிருக்கிறார்கள். படித்து யாரேனும் வருத்தப்பட்டீர்களா? என்னுடைய மொக்கையை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். சரி.

கடைசியாக ஒரு சாமியார் கதை படிப்போம். ஆணாதிக்கவாதிகளுக்கு மட்டும்.

ஒரு பர்பெக்ட் குடிமகனான மாமாவுக்கு கல்யாணம் ஆச்சு. கல்யாணத்துக்குப் பிறகும் இவர் டெய்லி தீர்த்தம் சாப்பிட்டு ஆத்துக்குப் போக, மாமியோடு தினமும் சண்டை. வெறுத்துப்போன மாமி நம்ம சாமியார்கிட்ட போய், தன்னோட கதைய சொல்லி புலம்பியிருக்கா. சாமியாரும் தன் வாய்லருந்து ஒரு லிங்கம் வர வெச்சு, மாமா ஆத்துக்கு வரும்போதெல்லாம் இந்த லிங்கத்துக்கு (சாதா) தீர்த்தம் விட்டு பூஜிக்க சொல்லியிருக்கார். மாமியும் தவறாம செய்ய, சண்டை குறைஞ்சு நின்னு போய்டுத்து. மாமாவும் மாமியும் சௌக்கியமா இருந்தா.

ஆனா ஒருநாள் அந்த லிங்கம் காணாமப் போய்டுத்து. பதறிப்போன மாமி சாமியார் கிட்ட மறுபடி ஓடிருக்கா. "சாமி வேற லிங்கம் கொடுங்கோ!"

சாமியார் அதுக்கு, "அசடே லிங்கத்துல ஒரு மந்திரமும் இல்ல. Keeping your mouth shut helps"ன்னாராம்.

--

சீக்கிரம் திரும்ப வரேன்...

20 comments:

pappu said...

ஷப்பா... முடில.... டம்பி.... வீடியோ சேர்த்திருந்தா ட்ராஃபிக்காவது கூடியிருக்கும்

கன்கொன் || Kangon said...

// இதற்கிடையில் சில சீரியஸ் பதிவர்கள் வழக்கம்போல இதென்ன கழிசடைகளை ஒளிபரப்புவது, journalistic ethics, privacy invasion, exploitation of actress', godmen in society என்று இங்கிலீஷ் வார்த்தைகளில் வருத்தப்பட்டிருக்கிறார்கள். படித்து யாரேனும் வருத்தப்பட்டீர்களா? //

:)))))))


ஹி ஹி...
நிறையச் சாமியார் மாட்டுப்பட்டிருக்கிறாங்கள்...
நீங்கள் மட்டும் எப்பிடி வெளில சுதந்திரமா இருக்கிறியள்? :P


//முதலில் வானவில் வீதியின் ஏழரைக்கோடி வாசகர்களுக்கு நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்ற நற்செய்தியை கூறிவிடுகிறேன்.//

இந்தச் செய்தியைப் படித்து 4 பேர் தற்கொலை முயற்சியாம்... :D

Madurai Saravanan said...

நல்லா மொக்கை போடுறிங்க . ரசிக்கும் படியா இருந்தது. வாழ்த்துக்கள்

DHANS said...

//முதலில் வானவில் வீதியின் ஏழரைக்கோடி வாசகர்களுக்கு நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்ற நற்செய்தியை கூறிவிடுகிறேன்.//

NARCHEITHI AARUKUPAA?

KALAKKARA KARTHI........

Rajalakshmi Pakkirisamy said...

Karki maathiri mokkai illaye? Better luck next time :) :)

கார்க்கி said...

//Karki maathiri mokkai illaye? Better luck next time :)/

ஆவ்வ்,,,இது பாராட்டா இல்லையான்னு தெரியலயேப்பா.....

சுவாரஸ்யம்தான் கார்த்திக்.. அப்படியே வி.தா.வ படு மொக்கை என்ற கருத்தையும் பதிவு செய்திருந்தால் என் யூத் இமேஜ் காப்பற்றப்படும் :)))

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. அப்படியே வி.தா.வ படு மொக்கை ..//
சகா, எனக்கும் பிடிக்கல.. நீங்க யூத் தான்.. :-))

நட்புடன் ஜமால் said...

கோடியிலும் ஏழரை தானா ...

Karthik said...

@பப்பு

ஹலோ இது ட்ராபிக்கே ஆவாத ஏரியா. பார்த்தீங்களா கவுண்ட் டவுன் மீட்டரே இல்ல. :)

***

@கனககோபி

ஆவ்வ் உள்ள அனுப்பறதுன்னு முடிவே பண்ணிட்டீங்களா?

//4 பேர் தற்கொலை முயற்சியாம்...

அது சுறா பட அறிவிப்ப கேட்டு.. :))

***

@மதுரை சரவணன்

நன்றிங்க. :)

***

@தன்ஸ்

தல, டோட்டல் டேமேஜ் பண்ணிட்டு டீடெயில்ஸ் வேற கேக்குறீங்க.. :)

எப்படி இருக்கீங்க?

***

@ராஜி

கார்க்கி மாதிரி மொக்கை எல்லாம் இங்க ஏன் தேடுறீங்க? என்ன அம்னீசியாவா? :)

karkibava.com is the place for you.

இதுல பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் நு வாழ்த்துக்கள் வேற.. :)

***

@கார்க்கி

மனீஷ் பாண்டேவ ஷேவாக்கோட கம்பேர் பண்ணுவாங்க போல. எகொகா இது? :)

ஒலக எழுத்தாளர், ஒலக டைரக்டர் பத்தி எல்லாம் கருத்து சொல்றதில்லைனு இருக்கேன். வாயைக் கிளறாதீங்க.. :)

***

@திருஞானசம்பத்

ரைட்டு. :)

***

@ஜமால்

நம்ப வாய்ல வரதே எழரை மட்டும்தான்.. :)

pappu said...

ட்ராஃபிக் ஆகாமலா இத்தன கமெண்ட்? ஒரு வேளை ட்ராஃபிக் ஜாம் ஆவாதுங்கறயா?

Karthik said...

@Pappu

பத்து கமெண்டலாம் ட்ராபிக்கா மதுரைல? இது அன்பால சேர்ந்த கூட்டம்.. ஆவ்வ் :))

Thamizhmaangani said...

yessss waiting for ur vinnai thaandi varuvaaya story! :)))
getting busy..hmm.. i cld feel ur pain as well:)

kanagu said...

ஷப்ப்பா... எவ்ளோ நாள் கழிச்சு ஒரு போஸ்ட்... :) :)

ஆனா நல்லா இருந்துது :) :) செம காமெடி... :) :)

மொபைல்ல எப்படி தமிழ் பதிவெல்லாம் படிக்கிறீங்க??? என்னால opera ப்ரௌஸர்ல படிக்க முடியல. :( :(

Karthik said...

@thamizh

thanks sis. for the understanding as well. :)

***

@kanagu

thanks thala. :)

tamil on mobile phones: http://tvs50.blogspot.com/2009/06/problem-view-tamil-fonts-in-mobile.html

this link might help you..

டம்பி மேவீ said...

:)

present sir

kanagu said...

லிங்குக்கு நன்றி தலைவா... இப்ப சூமாரா தெரியுது :) :)

வி.தா.வா. பாகம் மூண சீக்கிரம் போடுங்க :) :)

Srivats said...

5 hour dhaan collegennu solreenga ana night dhaan veetukku vareenga hmmm sari sari nadakkattum

Srivats said...

we are sailing in the same boat my friend, naanum oru thodarkadhai pottutu mudikkama erukken LOL~!

kadaseela sonna kadhai super appu!

அமிர்தவர்ஷினி அம்மா said...

மொத்தத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதுதான் முக்கியம் //

ஆமா அதுதான் முக்கியம் :)))))))

மொக்கையா இருந்தாலும் சுவாரசியம் கார்த்திக்.

Karthik said...

@kanagu

sure thala. it's on the way. :))

***

@srivats

understand you're being damn busy, but we do really miss your posts bro. hope you can find time for it. :)

***

@amithu amma

thanks. :))

Related Posts with Thumbnails