போஸ்டர் கலாச்சாரம்

நோபல் வாங்குவாள் என்று எதிர்பார்த்திருந்த பிரியா கல்யாணத்துக்கு,  சென்ற வார இறுதியில் திருச்சி சென்று வந்தேன். பிரியா என் மாமா பெண். அவளைப் பற்றி ஏற்கனவே இங்கே பலமுறை, டெல்லியில் வேலை பார்க்கும் பெரிய மனுஷி, ஏறக்குறைய ஜீனியஸ் என்றெல்லாம் கொடுத்த காசுக்கு மேல் கூவியிருக்கிறேன். அவள் கல்யாணமும் அவள் பர்சனாலிடியைப் போலவே எளிமையாக, அழகாக நடந்து முடிந்தது. வாழ்த்துக்கள் பிரியா. :)

***

திருச்சி பயணத்தின்போது ஜன்னலுக்கு வெளியே பார்த்தால்.. நமக்கு எது எதெற்கெல்லாம் போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது தெரிகிறது.

வாழ்த்துக்களை அட்டையில் தெரிவிக்கும் வழக்கத்தை விமர்சிப்பவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். மகள் பூப்பெய்தியதிலிருந்து (சரியான வார்த்தைதானா?) மகனின் முதல் பிறந்தநாள் வரை (போட்டோவில் குழந்தை வாயில் நிப்பிளுடன்) வாழ்த்து பேனர்கள் சாலையோரங்களை அலங்கரிக்கின்றன. நண்பன் இறந்துவிட்ட துக்கத்தை போஸ்டரில் அனுசரிப்பவர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சினிமா நாயகர்களுடைய ரசிகர்களின் அன்பை "அடைக்கும் தாழ்" யாராவது சீக்கிரம் டிஸைன் செய்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லது.

குலவிளக்கு 'சௌந்தர்யா ரஜினிகாந்த்' மணவாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துவதிலிருந்து, 'எந்திரன்' இசை, ட்ரெயிலர், பேக்ரவுண்ட் ஸ்கோர், எடிட்டிங், சினிமடோக்ராபி, கோரியோகிராபி, சிஜி அனிமேஷன், காஸ்ட்யூம் டிசைனிங் எல்லாம் வெற்றிபெற வாழ்த்திக் கொண்டிருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு இவை பிசியான நாட்கள்.

'எட்டர்னல் ஆப்டிமிஸ்ட்ஸ்' என்ற வார்த்தைக்கு இலக்கணமான அஜித் ரசிகர்களும் 'மங்கத்தா' வெற்றி பெற வாழ்த்துகிறார்கள். வாழும் வரலாறு, வருங்கால தமிழ்நாடு, இளையதளபதி 'டாக்டர் விஜய்' ரசிகர்கள் சும்மா இருந்தாலும், ஜோஸ் ஆலுக்காஸ்காரர்களின் ரசனை பிரமிக்க வைக்கிறது. தளபதியின் மந்தகாசப் புன்னகை விளம்பர பேனர் நிற்கும் வீதிகளில் குழந்தைகள் சாப்பிட மறுப்பதில்லை என்று சமீபத்திய ஏசி நீல்சன் கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.




அரசியல் போஸ்டர் கலாச்சாரத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டுமா என்ன? கருணாநிதி, ஸ்டாலினின் சமீபத்திய திருச்சி வருகைக்கு வைக்கப்பட்டு அகற்றப்படாமல் இருக்கும் சில பேனர்களை காண முடிந்தது. கருணாநிதியை "நிரந்தர முதல்வரே" என்று விளித்த பேனர் அண்ணன் அஞ்சாநெஞ்சனின் தம்பிகளால்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் அழகிரி ஸ்டாலின் கனிமொழி மூவரும் சிரிக்க, முதல்வரை "முத்தமிழ்க் காவலரே" என்ற விளம்பரம் மிகுந்த நேர்மையுடன் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனாலும் "சுழலும் சூரியனே" "தமிழர்களின் தலைப்பே" "களைப்பறியா உழைப்பே" போன்ற லூஸுத்தனங்கள் தொடர்வது தமிழின்/தமிழனின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு.

***

தனக்கு தானே சிலை வைத்துக் கொள்வதிலிருந்து, பஸ் ஸ்டாண்ட் முன்னால் பஸ் ஸ்டாண்டை விட பெரிதாக "நான் திறந்து வைத்தேன்", "ஆனால் அடிக்கல் நாட்டியது நான்" என்று கல்வெட்டு வைத்துக் கொள்வது வரை, வரலாற்றில் இடம் பெற தகுதியில்லாதவர்களின் insecure மனநிலையின் விளைவு என்று தோன்றுகிறது.

பிலிப் ஆடம்ஸ் அன்றே சொன்னார் "Advertising men and politicians are dangerous if they are separate. Together they become diabolical."

Peace!

34 comments:

ஆ! இதழ்கள் said...

பயங்கர கடுப்புகள கெளப்பிவிட்டுடான்கிய போலருக்கே கார்த்திக்.

எட்டர்னல் ஆப்டிமிஸ்ட்ஸ்' என்ற வார்த்தைக்கு இலக்கணமான அஜித் ரசிகர்களும் 'மங்கத்தா' வெற்றி பெற வாழ்த்துகிறார்கள்// என்ன இருந்தாலும் அஜித்மேல் உங்களுக்கு கொஞ்சூண்டு சாஃப்ட் கார்னர் இருக்கு... ;)

Subankan said...

பிரியாவுக்கு எனது வாழ்த்துகளும் :)

கார்க்கி said...

இது கொஞ்சூண்டு சாஃப்ட் கார்ணரா? சரி சரி

VELU.G said...

//என்று கல்வெட்டு வைத்துக் கொள்வது வரை, வரலாற்றில் இடம் பெற தகுதியில்லாதவர்களின் insecure மனநிலையின் விளைவு என்று தோன்றுகிறது.
//

சரியாகத் தான் சொல்கிறீர்கள்

அபி அப்பா said...

இன்றைக்கு தான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன். அழகிய சுஜாதா பாணி சுத்தமாக நன்றாக வருகின்ரது, வாழ்த்துக்கள். இனி தொடர்ந்து வருவேன் என நினைக்கின்றேன்!

கார்த்திகைப் பாண்டியன் said...

முழுக்க ட்விட்டர்லயே கிடந்தா எப்படி தம்பி? அப்பப்போ பிளாக் பக்கமும் வாங்க சாமி..

Karthik said...

@ஆனந்த்

அப்பப்போ காண்டாக வேண்டிருக்கே தல? எப்படி இருக்கீங்க? :)

***

@சுபாங்கன்

நன்றிங்க, சொல்லிடறேன். :)

***

@கார்க்கி

துதியில் "ராஜ, குலோ, துங்கவை" விட்டுவிட்டேன் என்று கோபமா கார்க்கி? :))

***

@வேலுஜி

நன்றிகள் ஜி. :)

***

@அபி அப்பா

ரொம்ப நன்றிங்ணா. நான் தமிழ்ல கொஞ்சமாவது படிச்சிருக்கிறதே சுஜாதாதான். அதனால் இருக்கலாம். :)

தொடர்ந்து வாங்க.

***

@கா.பா அண்ணா

ஹிஹி ட்விட்டர் ஈஸியா இருக்கறதாலதாங்ணா. இங்கே அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன். நன்றி. :)

Thamizhmaangani said...

//Advertising men and politicians are dangerous if they are separate. Together they become diabolical.//

i think you're speaking briteeesh english, machi!

(boss engira bhaskaran padam paarthavanagaluku intha joke puriyum!)

Vijay said...

தமிழ் நாட்டில் தான் இவ்வளவு சுவரொட்டிகள். ஒரு சதுர அங்குலத்தைக் கூட விட்டு வைக்காது ஒட்டுகிறார்கள். என்று திருந்துவார்களோ இந்த ஜன்மங்கள்.

Karthik said...

@தமிழ்

சிஸ்டர் இப்பிடி க்ரிப்டிக் ஜோக் எல்லாம் சொன்னா எப்பிடி? நான் இந்த வாரக்கடேசீலதான் சிரிக்க முடியும். :)

***

@விஜய்

ஆமாம் விஜய். முடில. :(

மகேஷ் : ரசிகன் said...

// insecure மனநிலையின் விளைவு//

Exactly.

மகேஷ் : ரசிகன் said...

போஸ்டர்களில் இருக்கும் வாசகங்கள் கொடுமையிலும் கொடுமை.

தமிழே,
வாழும் வள்ளுவரே,

கொடுமை சாமி,

நேசமித்ரன் said...

கார்த்திக் டிபிக்கல் ரைட்டிங் எப்பவும் போல

உங்க நோ-பல் :)பெண்ணுக்கு எனது வாழ்த்துகளும்

டம்பி மேவீ said...

அட்டைக்கு தயார் ஆகிடீங்க போல ?? வாழ்த்துக்கள் பிளாக் பக்கம் வந்ததற்கு

ஆதிமூலகிருஷ்ணன் said...

விஷயங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். உணர்வதை இவ்வளவு அழகான, ரசனையான நடையில் சொல்லத் தெரிந்தவர்கள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள் கார்த்திக். நீங்கள் நிறைய எழுதவேண்டும் என்பது என் ஆசை. ப்ளீஸ்.. செய்யுங்கள்.!

Karthik said...

@மகேஷ்

இது ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமும் இல்லை. நேத்து சேத்பேட்ல ஒரு போஸ்டர் பார்க்கிறேன். ப.சிதம்பரத்தை "வாழும் மகாத்மாவே" என்கிறது. என்ன கொடுமை பாருங்கள். மகாத்மாவாம். எந்த மகாத்மாவாவது இப்பிடி போஸ்டர் வெச்சுபாங்களா?

***

@நேசமித்ரன்

ரொம்ப நன்றிங்ணா. வாழ்த்துக்கள் சொல்லிடறேன். ;)

***

@மேவி

நன்றி தல. அட்டையா? :)

***

@ஆதி அண்ணா

ரொம்ப நன்றிங்ணா. இந்த வார்த்தைகளுக்கு நான் தகுதியானவனா தெரியலை. ஆனால் நிச்சயம் முயற்சிக்கிறேன். நன்றிகள். :)

DHANS said...

ada poopa karthi

ithelaam namakku puthusa, ipadi makkala sirika vaika avangalum evlo kasta paduvaanga...

enjoy pannu mamu :)

i am back with two recent posts:)

Karthik said...

By 2015, Karthik will get Nobel Prize for Physics.. :)

kanagu said...

நல்ல பதிவு கார்த்திக்.. :)

பிரியாவுக்கு வாழ்த்துக்கள் :) :)

போஸ்டர் கலாச்சாரத்தை பத்தி பேசுனாலே கடுப்பா இருக்கு... இங்க பார் கவுன்சில்-ல பதியருத்துக்கெல்லாம் பத்து இடத்துல பேனர் வைக்கிறாங்க.. முடியல..

அப்பப்ப பதிவு எழுதுப்பா..

vinu said...

"Advertising men and politicians are dangerous if they are separate. Together they become diabolical."


echukichumee ithukku tamil meaning ennag annatheaa konjam athayum vilakki solliputtenganna ungalukku punniyamaa pogum

Karthik said...

பலகாலம் கழிச்சு ப்ளாக் பக்கம் வரேன் மக்கள்ஸ். லேட் ரிப்ளைக்கு எல்லாரும் என்ன உங்க வீட்டு பிள்ளையா நினைச்சி மன்னிச்சிருங்க. :)

--

@தன்ஸ் - ஹிஹி அதுவும் சரிதான் தல. :)

@கார்த்திக் - இக் நோபல் தானே நம்ம எய்மே! :)

@கனகு - நன்றி தல. முயற்சிக்கிறேன். :)

@வினு அண்ணாத்தே - எனக்கு புண்ணியமே வேணாம். :)

குந்தவை said...

இவ்வளவு பெரிய விஷயத்தை ஆவேசமாக எதிர்த்து குரல் கொடுத்த கார்த்திக்கு,

போஸ்டர் கலாச்சாரத்தை
வான'வில்'லால்
குத்தி கிழித்த
கார்த்திக்கு வாழ்த்துக்கள்

என்று யாருக்காவது ஒரு போஸ்டர் ஒட்டணும்னு யோசனை வந்துச்சா?

---

உங்கள் எழுத்து வரவர ரெம்ப அழகாயிட்டு இருக்கு தம்பி. வாழ்த்துக்கள்.

kanagu said...

சார் சார்.. புது போஸ்ட் போடுங்க சார்.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்!

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_09.html

நன்றி!

Karthik said...

@கனகு - கிறிஸ்துமஸ் லீவ்ல சில பதிவுகள் எழுதலாம்னு இருக்கேன் தல. ரொம்ப நன்றி. :)

@பன்னிக்குட்டி ராம்சாமி - பார்த்தேன். ரொம்ப நன்றிங்க. :)

Karthik said...

@குந்தவை

ரொம்ப நன்றிங்க அக்கா. பின்னூட்டத்தை இப்போதான் பார்க்கிறேன். ஸாரி.

நீங்களும் காணாம போய்ட்டீங்க போலிருக்கே?

Dubukku said...

சூப்பராய் எழுதியிருக்கிறீர்கள்!!! அழகான நடை.. கற்றுக்கொள்கிறேன்

Dubukku said...

அடிக்கடி எழுதுங்க பாஸ்

Karthik said...

@Dubukku

I'm thrilled to see your comments here. You're being too kind. Thank you very much thala. Made my day. :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ்!!!!!

Karthik said...

@Amithu Amma

Thanks. Welcome back once again. :-)

Srivats said...

Endha maari post ezudhinadhukku ungalukku annasalaila 70 adikku oru poster vaikalam thalaiva :P

adha thirandhu vaikka vizha erpaadu panni adhukkum oru poster adikkanum :)

Srivats said...

And congrats for priya , May her days be filled with unconditional love, peace and wealth

Karthik said...

@srivats

haha you deserve a poster in mount road, more than anyone else, for coming back to blogging. :)

nandri hai. your wishes are definitely helping her. :)

Related Posts with Thumbnails